Freelancer / 2025 பெப்ரவரி 20 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
356 – பேரரசர் இரண்டாம் கான்ஸ்டன்டியசு உரோமைப் பேரரசில் உள்ள அனைத்து பாகன் கோவில்களையும் மூடிவிட கட்டளை பிறப்பித்தார்.
1594 – போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தின் மன்னர் மூன்றாம் சிகிசுமண்டு சுவீடன் மன்னராக முடி சூடினார்.
1600 – பெருவின் உவாய்நப்பூட்டினா என்ற சுழல்வடிவ எரிமலை வெடித்தது.
1649 – இரண்டாம் குவாராராப்பசு சமர் ஆரம்பமானது.பிரேசிலில் டச்சு குடியேற்றம் முடிவுக்கு வந்தது.
1674 – இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டதில் மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் போர் முடிவுக்கு வந்தது. இதன்படி டச்சு குடியேற்றப் பகுதியான நியூ ஆம்ஸ்டார்டாம் இங்கிலாந்துக்குக் கொடுக்கப்பட்டு நியூ யோர்க் எனப் பெயர் மாற்றப்பட்டது.
1807 – அமெரிக்காவின் முன்னாள் துணை அரசுத்தலைவர் ஆரன் பர் தேசத்துரோகக் குற்றம் சார் விக்கிரம ராஜசிங்கன் பிரித்தானியரால் தூம்பறை என்ற இடத்தில் கைது செய்யப்பட்டார்.
1815 – கண்டிப் போர்கள்: கண்டியின் கடைசி மன்ன
1876 – யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் ஆங்கில இதழ் வெளியிடப்பட்டது.
1878 – கிராமபோனிற்கான காப்புரிமத்தை தாமசு ஆல்வா எடிசன் பெற்றார்.
1884 – 60 இற்கும் மேற்பட்ட சுழல் காற்றுகள் ஐக்கிய அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளைத் தாக்கின.
1913 – பெத்ரோ லாசுகுராயின் மெக்சிக்கோவின் அரசுத்தலைவராக 45 நிமிட நேரம் மட்டும் பதவியில் இருந்தார்.உலகில் மிகக் குறைந்த நேரம் பதவியில் இருந்த அரசுத்தலைவர் இவரே.
1915 – முதலாம் உலகப் போர்: தார்தனெல்சு நீரிணை மீதான முதலாவது கடற்படைத் தாக்குதல் ஆரம்பமானது. ஆங்கிலோ-பிரெஞ்சுக் கூட்டுப் படைகள் உதுமானியப் படைகள் மீது கலிப்பொலி கரையோரப் பகுதிகளில் குண்டுகளை வீசின. கலிப்பொலி போர் ஆரம்பமாயிற்று.
1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய அமெரிக்கர்களை இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்க அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் உத்தரவிட்டார்.
1942 – இரண்டாம் உலகப் போர்: கிட்டத்தட்ட 250 சப்பானியப் போர் விமானங்கள் ஆத்திரேலியாவின் வட மண்டலத்தின் தலைநகர் டார்வின் மீது குண்டுகளை வீசியதில் 243 பேர் கொல்லப்பட்டனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: தூனிசியாவில் கேசரைன் கணவாய் சண்டை ஆரம்பமானது.
1948 – விடுதலைக்காகப் போராடும் தென்கிழக்காசியாவின் இளையோர் மற்றும் மாணவர் மாநாடு கல்கத்தாவில் ஆரம்பமானது.
1954 – கிரிமியாவை உருசிய சோவியத் குடியரசில் இருந்து உக்ரைன் சோவியத் குடியரசிற்கு கையளிக்க சோவியத் உயர்பீடம் முடிவெடுத்தது.
1959 – ஐக்கிய இராச்சியம் சைப்பிரசுக்கு விடுதலையை வழங்கியது. சைப்பிரசு அதிகாரபூர்வமாக 1960 ஆகத்து 16 இல் விடுதலை பெற்ற நாடாகியது.
1978 – சைப்பிரசின் லனார்க்கா விமான நிலையத்தில் கடத்தப்பட்ட எகிப்திய விமானத்தை விடுவிக்க சைப்பிரசின் முன் அனுமதியின்றி தாக்குதலில் ஈடுபட்ட எகிப்திய அதிரடிப் படைகளை சைப்பிரஸ் இராணுவத்தினர் தாக்கியட்தில் 15 எகிப்திய படைகள் கொல்லப்பட்டனர்.
1985 – வில்லியம் சுரோடர் செயற்கை இதயம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு மருத்துவமனையில் இருந்து வெளியேறிய முதலாவது நபரானார். 1985 – எசுப்பானியாவின் போயிங் விமானம் ஒன்று ஓயிஸ் மலையில் மோதியதில் 148 பேர் கொல்லப்பட்டனர்.
2002 – நாசாவின் மார்சு ஒடிசி விண்ணுளவி செவ்வாய்க் கோளின் மேற்பரப்பை வெப்ப உமிழ்வு முறை மூலம் வரைய ஆரம்பித்தது. 2003 – ஈரானில் இலியூசின் ரக இராணுவ விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 275 பேர் உயிரிழந்தனர்.
2006 – மெக்சிக்கோவில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் மெத்தேன் வெடிப்பு ஏற்பட்டதில் 65 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
2012 – மெக்சிக்கோவில் சிறைச்சாலை ஒன்றில் நிகழ்ந்த வன்முறைகளில் 44 பேர் உயிரிழந்தனர்.

13 minute ago
24 minute ago
39 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
39 minute ago
54 minute ago