2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று: பெப்ரவரி 28

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 28 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

1525 – அசுட்டெக் மன்னர் குவாவுத்தேமொக் எசுப்பானியத் தேடல் வீரர் எர்னான் கோட்டெசின் உத்தரவின் பேரில் தூக்கிலிடப்பட்டார்.

1710 – சுவீடனில் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்ட டென்மார்க் படையினர் எல்சின்போர்க் என்ற இடத்தில் வைத்து சுவீடன் படைகளால் தோற்கடிக்கப்பட்டனர்.

1784 – ஜோன் உவெசுலி மெதடிஸ்த திருச்சபையை ஆரம்பித்தார்.

1844 – பொட்டாமக் ஆற்றில் பிரின்ஸ்டன் என்ற படகில் பொருத்தப்பட்ட துப்பாக்கி வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த இரண்டு அமெரிக்க அமைச்சர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

1897 – மடகஸ்காரின் கடைசி அரசியான மூன்றாம் ரனவலோனா பிரான்சியப் படைகளினால் பதவியில் இருந்து அகற்றப்ப்பட்டார்.

1922 – எகிப்தின் விடுதலையை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது.

1935 – வொலஸ் கரோதேர்ஸ் என்பவரினால் நைலோன் கண்டுபிடிக்கப்பட்டது.

1942 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் ஊஸ்டன் என்ற கப்பலும், ஆத்திரேலியாவின் பேர்த் கப்பலும் இந்தோனீசியாவின் சுந்தா நீரிணையில் இடம்பெற்ற போரில் சப்பானினால் மூழ்கடிக்கப்பட்டதில் முறையே 693 பேரும், 375 பேரும் கொல்லப்பட்டனர்.

1947 – தாய்வானில் அரசுக்கெதிராக இடம்பெற்ற எதிர்ப்புப் போராட்டம் முறியடிக்கப்பட்டது. 30,000 பொதுமக்கள் உயிரிழந்தனர்.

1948 – கானாவில் பிரித்தானியக் காவல்துறையினன் ஒருவன் முன்னாள் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு ஒன்றை நோக்கிச் சுட்டதில் மூவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அக்ரா நகரில் பெரும் கலவரம் மூண்டது.

1953 – ஜேம்ஸ் வாட்சன், மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் தாம் டிஎன்ஏயின் வேதியியல் அமைப்பைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.

1954 – என்டிஎஸ்சி தரத்துடன் முதலாவது வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் விற்பனைக்கு வந்தன.

1958 – கென்டக்கியில் பாடசாலைச் சிறுவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சுமையுந்து ஒன்றுடன் மோதி ஆற்றிற்குள் வீழ்ந்ததில் 26 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.

1975 – லண்டனில் மூர்கேட் தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற புகைவண்டி விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர்.

1980 – அந்தாலூசியா பொது வாக்கெடுப்பு மூலம் தன்னாட்சியை அங்கீகரித்தது.

1986 – சுவீடன் பிரதமர் ஓலொஃப் பால்மே ஸ்டாக்ஹோம் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1991 – முதலாம் வளைகுடாப் போர் முடிவுற்றது.

1997 – வடக்கு ஈரானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 3,000 பேர் வரையில் இறந்தனர்.

1997 – ஜிஆர்பி 970228 என்ற மிகவும் ஒளிர்வான காம்மா கதிர்கள் 80 செக்கன்களுக்கு பூமியைத் தாக்கியது. இதன்மூலம் காமா கதிர் வெடிப்புகள் பால் வழிக்கப்பால் நிகழ்கின்றன என எடுத்துக்காட்டப்பட்டது.

1998 – கொசோவோவில் கொசோவோ விடுதலை இராணுவத்தின் மீது செர்பியக் காவற்துறையினர் தாக்குதலைத் தொடுத்தனர்.

2002 – குஜராத் வன்முறை 2002: அகமதாபாத்தில் இடம்பெற்ற இந்து-முஸ்லிம் கலவரத்தில் குறைந்தது 55 பேர் கொல்லப்பட்டனர்.

2005 – ஈராக்கு, கில்லா நகரில் காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 127 பேர் கொல்லப்பட்டனர்.

2006 – இந்தியாவில் சத்தீஷ்கார் மாநிலத்தில் தாண்டிவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுக்கள் நடாத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

2007 – புளுட்டோவை நோக்கி ஏவப்பட்ட நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் வியாழனை அண்மித்தது.

2013 – திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பணி துறந்தார். 1415 இல் பன்னிரண்டாம் கிரகோரி பதவி துறந்த பின்னர் இடம்பெற்ற முதலாவது பணிதுறப்பு இதுவாகும்.

2016 –தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் குமரிமுத்து காலமானார்.

சிறப்பு நாள்
அமைதி நினைவு நாள் (சீனக் குடியரசு)
தேசிய அறிவியல் நாள்
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .