Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 மார்ச் 07 , மு.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
1573 – உதுமானியப் பேரரசுக்கும் வெனிசுக் குடியரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. உதுமானிய-வெனிசியப் போர் முடிவுக்கு வந்தது. சைப்பிரசு உதுமானியரின் ஆளுமைக்குக் கீழ் வந்தது.
1799 – நெப்போலியன் பொனபார்ட் பாலத்தீனத்தின் யோப்பா பகுதியைக் கைப்பற்றினான். நெப்போலியனின் படையினர் 2,000 அல்பேனியக் கைதிகளைக் கொலை செய்தனர்.
1814 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் குரோன் நகரில் உருசியர்களுக்கும் புருசியர்களுக்கும் எதிரான போரில் வெற்றி பெற்றான்.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வடமேற்கு ஆர்கன்சாவில் அமெரிக்கப் படைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படையினரை வென்றனர்.
1876 – அலெக்சாண்டர் கிரகம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்றார்.
1900 – கம்பியில்லா சமிக்ஞைகளை கரைப் பகுதிக்கு அனுப்பிய முதலாவது கப்பலாக ஜேர்மனியின் கைசர் விலெம் டெர் குரொசி சாதனை படைத்தது.
1902 – இரண்டாம் பூவர் போர்: தென்னாபிரிக்காவின் பூவர்கள் பிரித்தானியர்களுக்கு எதிரான கடைசிச் சமரில் வெற்றியீட்டினர்.
1912 – தென் முனையைத் தாம் 1911 டிசம்பர் 14 இல் அடைந்ததாக ருவால் அமுன்சென் அறிவித்தார்.
1914 – அல்பேனியாவின் இளவரசர் வில்லியம் மன்னராக முடிசூட அல்பேனியா வந்து சேர்ந்தார்.
1918 – முதலாம் உலகப் போர்: பின்லாந்து செருமனியுடன் கூட்டுச் சேர்ந்தது.
1936 – இரண்டாம் உலகப் போர்: லுக்கார்னோ, வெர்சாய் ஒப்பந்த மீறல்களாக, செருமனி ரைன்லாந்து பகுதியை ஆக்கிரமித்தது.
1941 – செருமனியின் யு-47 நீர்மூழ்கி அதன் மாலுமிகளுடன் காணாமல் போனது.
1951 – ஈரான் பிரதமர் அலி ரசுமாரா தெகுரான் பள்ளிவாசல் ஒன்றில் வைத்து இஸ்லாமிய அடிப்படைவாதிகளான பெதயான் இ-இசுலாம் இயக்கத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1951 – கொரியப் போர்: கொரியாவில் ஐநாப் படைகள் சீனப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர்.
1965 – அமெரிக்கா, அலபாமா மாநிலத்தில் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்ட சுமார் 600 மனித உரிமை போராளிகள் மீது மாநிலக் காவல்துறை கடுமையான தாக்குதலை மேற்கொண்டது.
1968 – வியட்நாம் போர்: அமெரிக்க, தென் வியட்நாம் படைகள் மை தோ பகுதியில் இருந்து வியட்கொங் படைகளை வெளியேற்ற போர் நடவடிக்கையை ஆரம்பித்தன.
1971 – கிழக்குப் பாக்கித்தான் அரசியல் தலைவர் சேக் முஜிபுர் ரகுமான் டாக்காவில் நிகழ்த்திய தனது வரலாற்றுப் புகழ் மிக்க உரையில், 'இந்த முறை போராட்டம் நமது விடுதலைக்கானது,' என அறிவித்தார்.
1986 – சாலஞ்சர் விண்ணோட விபத்து: பிரிசர்வர் கப்பலின் சுழியோடிகள் சாலஞ்சர் விண்ணோடத்தின் பயணியர் அறையைக் கண்டுபிடித்தனர்.
1987 – தைவானிய இராணுவம் லியூ என்ற இடத்தி 19 வியட்நாமிய ஏதிலிகளைப் படுகொலை செய்தனர்.
1989 – மக்கள் சீனக் குடியரசு திபெத்தின் லாசா பகுதியில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தது.
1996 – பாலத்தீனத்தில் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.
2006 – லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் வாரணாசியில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகளை வெடிக்க வைத்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
2007 – ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள் அவையின் உறுப்பினர்கள் 100மூ தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் என ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை வாக்களித்தது.
2007 – இந்தோனேசியாவின் யாகியகர்த்தா விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த கருடா விமானம் வயல் ஒன்றில் வீழ்ந்து வெடித்ததில் 49 பேர் உயிரிழந்தனர்.
2009 – வட அயர்லாந்தில் குடியரசு இராணுவப் போராளிகள் இரண்டு பிரித்தானியப் போர்வீரர்களை சுட்டுக் கொன்று, மேலும் இருவரைக் காயப்படுத்தினர்.
19 minute ago
41 minute ago
51 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
41 minute ago
51 minute ago
52 minute ago