2026 மே 13, புதன்கிழமை

dd

சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை (வீடியோ)

Lenin Raj   / 2026 மே 13 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, வாகனச் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு போக்குவரத்துப் பொலிஸ் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக, மலையகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் வீதிகள் தெளிவாகத் தெரிவதில்லை. இதனால் போக்குவரத்துப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எட்டியாந்தோட்டை, கித்துல்கலை, வட்டவளை, ஹட்டன், நோர்வூட், பொகவந்தலாவை, போடைஸ், கொட்டகலை, தலவாக்கலை, நானுஓயா, நாகசேனை, டயகம, இராணிவத்தை, மஸ்கெலியா, நல்லத்தண்ணி, பூண்டுலோயா, கொத்மலை, றம்பொடை, நுவரெலியா, இராகலை, உடபுஸ்ஸலாவை, வெலிமடை, அட்டாம்பிட்டி, ஹாலிஎல, பதுளை, பசறை, பிட்டமாருவ, ரோபேரி, லுணுகலை, மொனராகலை மற்றும் மஹியங்கனை வழியாகக் கண்டி வீதி, ஸ்பிரிங்வெலி வீதி, கம்பளை முதல் பேராதனை வழியாக நுவரெலியா வீதி, உடபுஸ்ஸலாவை முதல் வெலிமடை வீதி, பலாங்கொடை முதல் பதுளை வீதி, ஹட்டன் முதல் இராவாணாகொடை வரையிலான வீதி, பத்தனை முதல் நாவலபிட்டி வரையிலான வீதி, ஹப்புத்தளை முதல் வெலிமடை வரையிலான குறுக்கு வீதி உள்ளிட்ட பல பிரதான மற்றும் குறுக்கு வீதிகள் கடும் மூடுபனியால் சூழப்பட்டுள்ளன.

வீதிகள் தெளிவின்றி காணப்படுவதால், சாரதிகள் தமது வாகனங்களின் மஞ்சள் நிற முகப்பு விளக்குகளை (Fog lights) ஒளிரவிட்டவாறு பயணிக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அதேவேளை, வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்புகளைப் பின்பற்றுமாறும், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் நிலச்சரிவு எச்சரிக்கைகளைக் கவனித்துச் செயல்படுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலைப் பகுதியில் தற்போது நிலவும் காலநிலை தொடர்பான காணொளி இதோ:
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .