2022 ஜூலை 04, திங்கட்கிழமை

ஜனாதிபதி செயலக ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிரடியாக கைது

J.A. George   / 2022 ஜூன் 20 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கோட்டா கோ கம” போராட்டக்காரர்கள், ஜனாதிபதி செயலகத்துக்குச் செல்லும் சகல வாசல்களையும் மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்துக்குள் செல்லவிடாமலும் தடுத்தனர். இதனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

அங்கு கடமையில் இருக்கும் பொலிஸார், ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து பொலிஸ் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டிருக்கின்றனர்.

இதனால், ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .