2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

பொலிஸ் அதிகாரியை அச்சுறுத்திய சாரதி கைது

J.A. George   / 2023 ஓகஸ்ட் 02 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம் விதிக்கப்பட்ட பின்னர், போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்தும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பேருந்தின் சாரதி வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சந்தேக நபர் போக்குவரத்து பொலிஸ் அதிகாரியை வாய்மொழியாக அச்சுறுத்துவதையும், தன்னை தில்ஷான் என்று அறிமுகப்படுத்திக்கொள்வதையும், அபராதம் விதித்த பிறகு அந்த அதிகாரியை வீதியில் இருக்க வேண்டாம் என்று எச்சரிப்பதையும் இந்த வீடியோவில் காணலாம்.

சமூக ஊடகங்களில் பரவிய காணொளியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹெட்டியவத்த - கரகம்பிட்டிய பாதையில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சந்தேக நபருக்கு வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின், குறிப்பிட்ட போக்குவரத்து பொலிஸ் அதிகாரியினால் போக்குவரத்து விதிமீறலுக்காக அபராத சீட்டு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .