2026 மே 13, புதன்கிழமை

வயலுக்குச் சென்ற விவசாயி சடலமாக மீட்பு

Mayu   / 2026 மே 13 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊத்துச்சேனை வயல் பகுதியில், விவசாயி ஒருவர் கால்வாயிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகனேரி, குளத்துமடு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய செல்லத்துரை கோபால் என்ற விவசாயியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (12) பெய்து கொண்டிருந்த மழையையும் பொருட்படுத்தாது, குறித்த விவசாயி தனது வயல் நடவடிக்கைகளுக்காகச் சென்றுள்ளார். எனினும், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததையடுத்து அச்சமடைந்த உறவினர்கள் அவரைத் தேடி வயல் பகுதிக்குச் சென்றுள்ளனர். இதன்போது, அங்குள்ள கால்வாய் ஒன்றில் அவர் சடலமாகப் படுத்திருப்பதைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உறவினர்கள் வழங்கிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வாழைச்சேனை பொலிஸார், முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர். அதனைத் தொடர்ந்து, நீதிமன்ற அனுமதியைப் பெற்று சடலம் மீட்கப்பட்டு, மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியும் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

மழை வெள்ளத்தில் தவறி விழுந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனகராஜா சரவணன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .