Lenin Raj / 2026 மார்ச் 17 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹற்றனில் எரிபொருளுக்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதன் காரணமாக, ஹற்றன் நகரப்பகுதிக்குள் வாகனங்கள் பிரவேசிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
ஹற்றன் மல்லியப்பு சந்தியிலுள்ள எரிபொருள் நிலையத்திலிருந்து ஹற்றன் மத்திய பேருந்து நிலையம் வரை இந்த எரிபொருள் வரிசை நீண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அதேநேரம், பழைய QR குறியீட்டினைப் பயன்படுத்தி எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் சிலர் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, QR குறியீட்டைப் பெற்றுக்கொண்ட பின்னர் வாகனத்தை விற்பனை செய்திருந்தால், அந்த வாகனத்தைப் புதிதாகக் கொள்வனவு செய்தவர் புதிய QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்குகின்றார்.
46 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago