2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

“எதிரணிக்கு கைகொடுக்க எந்த தேவையும் இல்லை”

J.A. George   / 2021 ஜூலை 30 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சியுடன் பேச்சுவாரத்தை நடத்தும் எண்ணமே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இல்லை என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

எதிர்க்கட்சி என்ற போது அவர்களது ஆதரவாளர்களுக்கு ஆட்சியை பிடிப்பது தொடர்பான கனவினை வழங்க வேண்டிய தேவை அவர்களுக்கு உள்ளதாக  அவர் கூறினார்.

எனினும், எதிரணியினருக்கு அவர்களது வேலைத்திட்டம் தொடர்பில் கதைப்பதற்கு உரிமை உள்ளது என்று கூறிய அவர், எதிரணியுடன் பேச்சு நடத்த ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்றார்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்பும் நடவடிக்கைக்காக 22 மாவட்டங்களுக்கு செல்லவுள்ளதாக அவர் கூறினார்.

அதேநேரம், அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் என்ற ரீதியில் தற்போதைய நிலையில் மற்றுமொரு கட்சிக்கு உதவி செய்யவோ புதிய அரசாங்கத்தை அமைக்கவோ எந்த தேவையும் தமக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .