2022 ஜனவரி 25, செவ்வாய்க்கிழமை

இணையத்தின் ஊடான மது விற்பனை; GMOA எதிர்ப்பு (வீடியோ)

J.A. George   / 2021 ஜூன் 16 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயணக் கட்டுப்பாட்டு காலப்பகுதியில் வீடுகளுக்கு இணையம் ஊடாக மது விநியோகம் தொடங்கப்பட்டால் அது நாட்டுக்கு ஒரு மோசமான முன்னுதாரணமாக இருக்கும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA)தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் டொக்டர் பிரசாத் கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற ஒரு திட்டத்திற்கான தயாரிப்பு சதித்திட்டமாக இருக்கலாம் என, சந்தேகம் ஏற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றுநோயால் பல அத்தியாவசிய செயல்பாடுகள் சீர்குலைந்திருக்கும் நேரத்தில் மது விநியோகத்துக்கு ஒரு பொறிமுறையை அமைப்பது கேள்விக்குரியது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X