2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

வாராந்தம் 300,000 லிட்டர் திரவ மருத்துவ ஒக்சிஜன் இறக்குமதிக்கு அனுமதி

J.A. George   / 2021 ஓகஸ்ட் 24 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாராந்தம் 300,000 லிட்டர் திரவ மருத்துவ ஒக்சிஜனை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

திரவ மருத்துவ ஒக்சிஜனை கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவை பத்திரம், சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

கொரோனா தொற்றாளர்களுக்கான ஒக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்கு மாதாந்தம் 120,000 லிட்டர் திரவ மருத்துவ ஒக்சிஜனை இறக்குமதி செய்ய கடந்த மே மாதம் 24 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியது.

எனினும், தற்போது திரிபடைந்த வைரஸ் தொற்று அதிகரித்து செல்வதால், இறக்குமதி செய்யப்படும் ஒக்சிஜனின் அளவை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .