2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக்கொள்ள இலவச போக்குவரத்து

J.A. George   / 2021 ஜூன் 10 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரேஷ்ட பிரஜைகளுக்கான ஓய்வூதிய கொடுப்பனவை இன்றும் (10) நாளையும் (11) பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

கொடுப்பனவினை ஓய்வூதியம் பெறுவோரின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட்டுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களுக்கு செல்வதற்கு  இலவச பஸ் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி கூறியுள்ளார்.

ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்வற்கும் பஸ்களில் பயணிப்பதற்கும் ஓய்வூதியத்திற்கான அட்டை அல்லது தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் 667,710 ஓய்வூதியம் பெறும் சிரேஷ்ட பிரஜைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .