2021 ஜூலை 28, புதன்கிழமை

புலிகளை ஊக்குவித்த ஒருவர் செங்கலடியில் கைது (Video)

J.A. George   / 2021 மே 03 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட ஒருவர் நேற்று(02) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏறாவூர் – செங்கலடி பகுதியில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சமூக ஊடகங்களை பயன்படுத்தி சந்தேகநபர், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் – செங்கலடி பகுதியைச் சேர்ந்த 56 வயதான நவனீதன் பிள்ளை மோகன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பேச்சாளர் கூறினார்.

சந்தேக நபரிடம் இருந்து ஐ.பேட் மற்றும் ஐ-போன் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .