2022 ஜூலை 06, புதன்கிழமை

ரிஷாட் பதியுதீனிடமிருந்து அலைபேசி மீட்பு

J.A. George   / 2021 செப்டெம்பர் 02 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து அலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இதனை, சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க  தெரிவித்துள்ளார்.

சிறைக்காவலர்கள் அவரது சிறைக்கூடுக்கு அருகில் சென்ற போது, அலைபேசி வெளியில் வீசப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மெகசின் சிறைச்சாலையில் நேற்று (01) மீட்கப்பட்ட அலைபேசி தொடர்பில் ஆராய்வதற்காக புலனாய்வு பிரிவினரிடம் அது ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இந்த சட்டவிரோத செயற்பாடு குறித்து, பாராளுமன்ற உறுப்பினரை சிறைச்சாலை தீர்ப்பாயத்தில் விசாரணை நடத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .