Mayu / 2026 மே 21 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பில் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையிலும், நகரின் மையப்பகுதியில் அடுத்தடுத்து இருந்த 3 கடைகளை உடைத்து பல லட்சம் ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று புதன்கிழமை (20) அதிகாலையில் இத்துணிகரத் திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மட்டக்களப்பு நகரின் முக்கிய சந்திகள் மற்றும் வீதிகளில் பொலிஸார் இரவு பகலாக விசேட பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இத்தகையதொரு பாதுகாப்புச் சூழலிலும், திருடர்கள் இந்த கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
நகரின் மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில், தனியார் பஸ் வண்டிகள் நிறுத்தும் பிரதான பஸ் நிலையத்திற்கு முன்னால் அருகருகே அமைந்துள்ள கடைகளே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளன.

இரு புடவைக்கடைகள் மற்றும் ஒரு இலத்திரனியல்/கைத்தொலைபேசி விற்பனை நிலையம்.
கடைகளின் பூட்டுகளை அலவாங்கால் (கம்பிகளால்) உடைத்து திருடர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.

கடைகளிலிருந்த மேசை இலாச்சிகளை (Drawers) உடைத்து, அங்கிருந்த பல இலட்சம் ரூபாய் பணம் மற்றும் பெறுமதிமிக்க இலத்திரனியல் பொருட்களை கொள்ளையடித்து தப்பியோடியுள்ளனர்.
பொலிஸ் நடவடிக்கை: இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தடயவியல் ஆதாரங்களைச் சேகரித்து மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
கனகராஜா சரவணன்
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago