Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2020 ஒக்டோபர் 07 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மினுவாங்கொடை Brandix தொழிற்சாலையில் பணிபுரியும் கம்பஹாவைச் சேர்ந்தவர்கள் அல்லது அங்கு தங்கியிருந்து குறித்த தொழிற்சாலையில் பணிபுரிபவர்களுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
உடனடியாக இன்று பிற்பகல் 6 மணி அல்லது அதற்கு முன்னர் அவர்களை பதிவு செய்துகொள்ளுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், பின்வரும் இடங்களில் பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஶ்ரீ போதி விளையாட்டு மைதானம் – கம்பஹா பொலிஸ் பிரிவு
கணேமுல்ல பொலிஸ் நிலையம் – கணேமுல்ல பொலிஸ் பிரிவு
யக்காஹட்டுவ சந்தி – மினுவாங்கொடை பொலிஸ் பிரிவு
பொலிஸ் விளையாட்டு மைதானம் – வெயாங்கொடை பொலிஸ் பிரிவு
அத்தனகல்ல பிரதேச செயலகம் – நிட்டம்புவ பொலிஸ் பிரிவு
பல்லேவெல தபால் நிலையம் – பல்லேவெல பொலிஸ் பிரிவு
மிரிகாம பிரதான பேருந்து நிலையம் – மிரிகாம பொலிஸ் பிரிவு
வீரகுல பொலிஸ் நிலையம் – வீரகுல பொலிஸ் பிரிவு
மிரிஸ்வத்தை பிரதேச சபை – யக்கல பொலிஸ் பிரிவு
நெல்லிகஹமுல்ல எரிபொருள் நிரப்பு நிலையம் – மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவு
வெலிவேரியா பொலிஸ் நிலையம் – வெலிவேரியா பொலிஸ் பிரிவு
வெஹேக்கே – பிரதேச செயலகம் – கிரிந்திவெல பொலிஸ் பிரிவு
தொம்பே பொலிஸ் நிலையம் – தொம்பே பொலிஸ் பிரிவு
பெல்பிட்ட கனிஷ்ட வித்தியாலயம் – பூகொடை பொலிஸ் பிரிவு
அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பதிவு செய்ததன் பின்னர், விபரங்களைப் பெற்றுக்கொண்டு தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, Brandix நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் வேறு இடங்களுக்கு சென்றிருந்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் உடனடியாக தம்மை பதிவு செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
16 minute ago
53 minute ago
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
53 minute ago
1 hours ago
9 hours ago