2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

CIDயில் பிள்ளையான் ஆஜரானார்

J.A. George   / 2024 நவம்பர் 20 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு (CID) இன்று (20) காலை வாக்குமூலம் வழங்குவதற்காக வந்துள்ளார்.

இலங்கையில் 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய சனல் 4 ஆவணப்படம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான புதிய விசாரணைக்கமைய வாக்குமூலத்தை வழங்குவதற்காக நவம்பர் 12 ஆம் திகதி பிள்ளையான் முதலில் சிஐடிக்கு அழைக்கப்பட்டிருந்தார். இருப்பினும், அவர் மாற்று திகதியை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .