J.A. George / 2021 மே 17 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் இன்னமும் சரியான முறையில் அவதானம் செலுத்தவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாக திஸ்ஸ அத்தநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைக் கூறியுள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்று மிக ஆபத்தான நிலையிலுள்ளது, சமூகமயமாகியுள்ளது அத்தோடு கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் சதவீதத்தை மறைக்க நினைத்தாலும் தற்போதைய நிலையில் உண்மைத் தன்மையை நாளாந்தம் அறியக் கூடியதாக உள்ளது.
கொரோனா சகல மாவட்டங்களிலும் பரவியுள்ளது. இந்த விடயம் இரகசியம் இல்லை. கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் வைரஸை தடுக்க அல்லது கட்டுப்படுத்த அரசாங்கம் இன்னமும் சரியான கவனம் செலுத்த வில்லை” என, அவர் மேலும் கூறியுள்ளார்.
10 minute ago
23 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
23 minute ago
2 hours ago
2 hours ago