2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஏர் சீனா சேவை மீண்டும் ஆரம்பம்

J.A. George   / 2023 ஜூலை 04 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றுக்குப் பிறகு சீன விமான நிறுவனமான "ஏர் சீனா" மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை தொடங்கியுள்ளதுடன், அதன் முதல் விமானம் இலங்கைக்கு வந்துள்ளது.

குறித்த விமானம் நேற்று (03) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர், இந்த சீன விமான நிறுவனம் இலங்கைக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியது.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சீனா ஏர்லைன்ஸ் விமானம் CCA-425 நேற்று இரவு 08.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

அந்த விமானத்தில் 142 பயணிகளும் 09 விமான ஊழியர்களும் இருந்தனர்

"Air China" விமான சேவையானது ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சீனாவின் செங்டுவில் இருந்து இரவு 08.55 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது, 

மீண்டும் அதே விமானம் கட்டுநாயக்காவில் இருந்து அதே நாளில் இரவு 10.15 மணிக்கு சீனாவின் செங்டுவிற்கு புறப்பட உள்ளது. .

இந்த முதலாவது விமானத்தை வரவேற்க இலங்கைக்கான சீனத் தூதுவர் உள்ளிட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .