Lenin Raj / 2026 மார்ச் 20 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடிப் பகுதிக்குள் புகுந்த ஒற்றை யானை (தனியன்), கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருவதாகப் பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த ஒற்றை யானையின் அச்சுறுத்தல் நேற்று இரவு முதல் நீடித்து வருவதுடன், பயிர் நிலங்கள் மற்றும் வீட்டு வளவுகள் மட்டுமன்றி, வர்த்தக நிலையம் ஒன்றையும் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளதாக மக்கள் குறிப்பிட்டனர்.
அப்பகுதியில் போதிய மின்விளக்கு வசதிகள் இல்லாத காரணத்தினால், யானையைக் காட்டுக்குள் விரட்டுவதில் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். இன்று (20) அதிகாலை 7 மணி வரை மக்களை அச்சுறுத்தும் வகையில் அந்த யானையின் நடமாட்டம் காணப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கப்பட்ட போதிலும், இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அண்மைக்காலமாக இப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், இதற்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

18 minute ago
23 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
23 minute ago
3 hours ago