Mayu / 2026 மே 17 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு கீழ் உள்ள வாவியில், மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) காலை மீட்கப்பட்டுள்ளது.
கல்லடி, புதிய டச்பார் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய சந்திரசேகரன் கஜேந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இன்று காலை 6.30 மணியளவில் குறித்த வாவியில் வழமை போல மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் பாரமான பொருள் ஒன்று சிக்கியுள்ளது. அதனை இழுத்துப் பார்த்த போது, மனித சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த மீனவர், உடனடியாக சடலத்தைக் கரைக்கு இழுத்து வந்து காத்தான்குடி பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
உயிரிழந்த நபர் மதுபோதையில் வாவியில் நீராடச் சென்ற போது, நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் இடத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்குத் தேவையான நீதிமன்ற அனுமதியைப் பெறும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கனகராஜா சரவணன்
11 minute ago
20 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
20 minute ago
31 minute ago