J.A. George / 2020 ஒக்டோபர் 08 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொரளை – காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் தற்போது, முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த பெண் பிரென்டிக்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நிறுவனத்தில் பணிபுரிந்தவர் என தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அவர் பணியாற்றும் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்குமான PCR பரிசோதனை இன்று மாலைக்குள் முன்னெடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago