Mayu / 2026 ஏப்ரல் 06 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) தரைப் பகுதியை நவீன முறையில் புணரமைப்பதற்காக 6 கோடியே 67 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கான அபிவிருத்திப் பணிகள் இன்று (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அபிவிருத்திப் பணிகளுடன் இணைந்ததாக, சுமார் 40 இலட்சம் ரூபா செலவில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட விசேட சுற்றுலாப் பேருந்து சேவையும் இன்று (06) ஆரம்பிக்கப்பட்டது. நுவரெலியா மாவட்டத்திற்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், அவர்களுக்குச் சிறந்த போக்குவரத்து வசதிகளை வழங்கும் வகையிலும் இந்தப் பேருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
ஹட்டன் டிப்போ முகாமையாளர் பாலித்த தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி: தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர், கிருஸ்ணன் கலைச்செல்வி: பாராளுமன்ற உறுப்பினர், அசோக்க கருணாரட்ண: ஹட்டன் - டிக்கோயா நகர சபை உறுப்பினர், பிரதீப் வீரசூரிய: ஹட்டன் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர், சுகததாச: பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி என பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலும், நோர்வூட் பிரதேச சபையின் பிரதிச் செயலாளர், நுவரெலியா மாவட்ட போக்குவரத்து சேவைப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பல அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .