J.A. George / 2022 பெப்ரவரி 21 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில் இன்று(21) மின் விநியோகம் கட்டம் கட்டமாக துண்டிக்கப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
காலை 8.30 முதல் இரவு 5.30 வரையான காலப்பகுதியில் தென் மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் ஒரு மணி நேரம் மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
காலை 8.30 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியில் தென் மாகாணத்தில் மாத்திரம் 3 மணி நேரம் மின் விநியோகம் துண்டிக்கப்படும்.
இதேவேளை,? உயர் தரப்பரீட்சை இடம்பெறும் காலை 8.30 முதல் 11.30 வரையிலும், பிற்பகல் 1.30 முதல் 4.30 வரையான காலப்பகுதியிலும் மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும், இதற்கான இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago