2026 மார்ச் 25, புதன்கிழமை

பராட்டே வேண்டாம்: வீடியோ

Mayu   / 2026 மார்ச் 25 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்தமையினால் நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு 52% பங்களிப்புப் பெற்றுத் தரும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் தொழில்முனைவோரும் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். 

 

இந்த எரிபொருள் விலை ஏற்றம் உற்பத்தி சுழற்சிக்கும் தேவை மற்றும் விநியோக சங்கிலிக்கும் கடுமையான எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் தொழில்முயற்சியாளர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கருத்துத் நெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் தொழில்முனைவோர் 45 இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் பல்வேறு குடும்பங்களுக்கு வாழ்வாதாரங்களையும் பெற்றுத் தருகின்றனர். 

இந்த துறை சரிந்தால் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிதறி குடும்ப பொருளாதாரம் சரிந்து நாட்டின் உற்பத்தி திறன் பலவீனப்படும். 

இந்த நிலையில் தற்போதைய அரசாங்கம் தலையிட்டு நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் தொழில்முனைவோருக்கும் ஆதரவையும் பக்க பலத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கம் டிரில்லியன் கணக்கான பணத்தை திரட்டி திறைசேரியை நிரம்பியுள்ளதாக கூறுவதால் 2019 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ஐந்து சோகமான சம்பவங்களுக்கு முகம் கொடுத்து வீழ்ச்சி கண்ட நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் தொழில்முனைவோரையும் மீண்டும் தூக்கி நிறுத்த வேண்டும்.

நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பக்க பலத்தைப் பெற்றுத் தரும் இந்த தொழில் பிரிவினருக்கு இன்னும் உரிய கவனிப்பு கிடைக்கவில்லை. ஆகையினால் உடனடியாக பராட்டே சட்டத்தின் அமுலாக்கத்தை இடை நிறுத்த வேண்டும்.  

வீழ்ச்சி கண்ட தொழில் முயற்சிகளை தூக்கி விட வேண்டும். நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் தொழில்முனைவோர்களினது கடன்களை அவர்களால் மீளச் செலுத்துவதற்கு முடியுமான வகையில் மறுசீரமைப்புக்கு செல்ல வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் தொழில்முனைவோருக்கும் பொருளாதார சலுகைப் பொதிகளை அரசாங்கம் வழங்க வேண்டும். மூலப்பொருட்கள் வழங்குவோர் தங்கள் விலை உயர்வை இந்த தொழிலாளிகளிடம் திணிப்பதாகவும், தொழிலாளிகளின் விலை உயர்வை நுகர்வோரிடம் திணித்தால் போட்டித்தன்மை இழந்துவிடுவதனால் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் தொழில்முனைவோரும் கடுமையான அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்த தொழில்முனைவோருக்கும் தொழிலாளிகளுக்கும் சலுகை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

SVAT முறையில் ஏற்றுமதியாளர்களுக்கு கிடைத்து வந்த பக்க பலத்தை இப்போது இழந்துவிட்டனர். குறிப்பிட்ட நாட்களில் இந்த சலுகைகளைப் பெற்றுத் தருவதாக கூறினாலும் 90 நாட்கள் கடந்தும் திருப்பி செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. 

அரசாங்கம் வரி வலையை விரிவாக்குவதால் வணிகர்களிடம் விதிக்கப்படும் வரி சுமையை குறைக்க வேண்டும். வரிகளை அதிகரிப்பதால் தொழில் முயற்சிகள் சரிவைச் சந்தித்து வருகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போதுள்ள நிலையில் நமது நாட்டின் தொழில் துறை சரிவடைவது நிச்சயம். ஆடை தொழில் துறை கூட கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. நமது நாட்டில் இயங்கிய பல தொழிற்சாலைகள் வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. 

முதலீட்டு மூலதனம் வேறு நாடுகளுக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளதால், இந்த அழுத்தத்திலிருந்து அவர்களை விடுவிப்பது அரசின் பொறுப்பாக காணப்படுகின்றன. இவர்களின் பிரச்சினைகளுக்கு காது கொடுக்க அரசாங்கம் சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .