2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

’மக்களின் வயிற்றில் அடித்து பணத்தை திருடுகின்றனர்’

J.A. George   / 2022 மார்ச் 14 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதும் ஆட்சியாளர்கள் மக்களின் வயிற்றில் அடித்து பணத்தை திருடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போதைய நிலைமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

சீனாவிடம் கொரோனா தடுப்பூசி கொள்வனவு, இந்தியாவிடம் திரவ உரம் கொள்வனவு, மியன்மாரிடம் அரிசி கொள்வனவு என, அனைத்து கொள்வனவுகளுக்கும் பெறுமதிக்கு அதிக பணம் கொடுக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறான நிலையில், ஐ.எம்.எப் சென்றால் அவர்களிடம் வாங்கும் பணத்துக்கு கொள்வனவு செய்யப்படும் விடயங்கள் குறித்து முறையான கணக்கு காட்ட வேண்டும் என்பதால் அதனை செய்ய அரசாங்கத்துக்கு விருப்பமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .