Mayu / 2026 மே 17 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிப் போரில் உயிரிழந்த ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட உறவுகளை நினைவுகூரும் "முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்" நிகழ்வு, இன்று (17) திருகோணமலை சிவன் கோயிலடியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்த உறவுகளுக்காக அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மலரஞ்சலி செலுத்தித் தமது அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
இறுதி யுத்தத்தின் போது மக்கள் பட்டினியால் வாடிய வேளையில், அவர்களின் உயிர் காக்கக் கிடைத்த ஒரே உணவான 'முள்ளிவாய்க்கால் கஞ்சி', இந்த நினைவேந்தல் நிகழ்வின் ஒரு பகுதியாகத் தயாரிக்கப்பட்டு அங்கிருந்த மக்களுக்குப் பரிமாறப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நாளை (18) மாலை வரை நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும், நாளை (18) முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெறவுள்ள பிரதான நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வதற்காகத் திருகோணமலையிலிருந்து செல்லும் மக்களுக்காக விசேட பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஏ.எச் ஹஸ்பர்
12 minute ago
21 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
32 minute ago