Mayu / 2026 ஏப்ரல் 30 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல்களைக் கண்டித்தும், குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வைத்தியசாலையின் அனைத்து ஊழியர்களும் இன்று (30) காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவத்தின் பின்னணி:
கடந்த 28 ஆம் திகதி மஸ்கெலியா பகுதியில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் காயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த நபரை மீண்டும் தாக்குவதற்காக மற்றுமொரு குழுவினர் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். இதனைத் தடுக்க முயன்ற வைத்தியசாலை ஊழியர் மற்றும் தாதியர் ஒருவரை குறித்த கும்பல் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முற்பட்டுள்ளது.
வைத்தியர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஊழியர்களும் கறுப்புப் பட்டி அணிந்து இந்தப் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
சட்ட நடவடிக்கை தாமதம்: இச்சம்பவம் குறித்து மஸ்கெலியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.ஆர்.என். ரிசான் தெரிவித்துள்ளார்.
தொடரும் போராட்டம்: அத்துமீறிய கும்பலைச் சேர்ந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்படும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.:
வைத்தியசாலை ஊழியர்களின் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, தூர இடங்களிலிருந்து சிகிச்சைக்காக வருகை தந்த நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எஸ் சதீஸ்
11 minute ago
28 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
28 minute ago
2 hours ago