2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’மைத்திரியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்’

J.A. George   / 2022 ஜனவரி 20 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டமைக்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தாம் உருவாக்கிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவும் மைத்திரிபால சிறிசேனவும் அழித்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அழிந்துவிடும் என்பதால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைய வேண்டாம் என இரண்டு வருடங்களாக விடுத்த கோரிக்கைக்கு மைத்திரிபால சிறிசேன செவிசாய்க்கவில்லை எனவும் அதனை வலியுறுத்தியதால் கட்சியின் அரசியல் குழு மற்றும் ஏற்பாட்டுக் குழுவில் இருந்து தாம் நீக்கப்பட்டதாகவும் குமாரதுங்க தெரிவித்தார்.

தான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கூறியதையே தற்போது மைத்திரிபால சிறிசேன மீண்டும் கூறுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்த காலத்திலும் நாட்டின் பொருளாதாரத்தை சிறப்பாக நிர்வகித்ததாகத் தெரிவித்த குமாரதுங்க, இன்று நாட்டைப் பார்க்கும் போது அழுவதற்கோ சிரிப்பதற்கோ நினைத்துப் பார்க்க முடியாது என்றும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .