Mayu / 2026 ஏப்ரல் 28 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் பல மாநிலங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அதிலிருந்து பயணிகளையும் தங்களையும் காக்க முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் புதிய யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர். அந்த வகையில், தனது முச்சக்கரவண்டியின் மேற்கூரையைத் தென்னை ஓலையால் வேய்ந்துள்ள ஒரு ஓட்டுநரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாகக் கோடை காலத்தில் இரும்பு மற்றும் பிளாஸ்டிக் கூரைகளைக் கொண்ட முச்சக்கரவண்டிகளின் உட்புறம் அதிக வெப்பமாக இருக்கும். இதனைத் தவிர்க்க, இந்த முச்சக்கரவண்டி ஓட்டுநர் தனது வாகனத்தின் மீது பாரம்பரிய முறையில் தென்னை ஓலைகளைக் கொண்டு கூரை அமைத்துள்ளார்.
"ஆட்டோக்காரர்களின் கவனத்திற்கு" என்ற வாசகத்துடன் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, கோடை வெயிலைச் சமாளிக்க ஒரு சிறந்த முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது. "தேவையே கண்டுபிடிப்பின் தாய்" என்பதற்கு இந்த ஆட்டோ ஓட்டுநர் ஒரு சிறந்த உதாரணம் என நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
16 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago