2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

'சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் காணியில் உள்ள 406 குடும்பங்களுக்கு பெப்ரவரியில் வீட்டுத் திட்டம்'

Super User   / 2010 டிசெம்பர் 27 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் காணியில் வசிக்கும் சுனாமியால் பாதிக்கப்பட்ட 406 குடும்பங்களுக்குமான வீட்டுத் திட்டத்தினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர உறுதியளித்துள்ளார்.

சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சமூகமளித்திருந்த அரசாங்க அதிபரை, சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் காணியில் வசிக்கும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று சந்தித்தனர்.

தற்போது பெய்துவரும் மழையினால் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் தமக்கான வீடுகள் அமைத்துத் தரப்படாமை குறித்து பேசினார்கள்.

இதன்போதே, அரசாங்க அதிபர் மேற்கண்ட உறுதிமொழியினை வழங்கினார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு தொகுதியினர் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலுக்குப் பின்னாலுள்ள பள்ளிவாசல் காணியில் கடந்த 06 வருடங்களாக தகரக் கொட்டில்களில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் காணியில் வசித்து வரும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலை:

 



 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X