2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு 12 வைத்தியர்கள் நியமனம்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 21 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு முதன்முறையாக ஒரே தடவையில் 12 வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் உதவி வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கிரிசுதன் தெரிவித்தார்.

இவ்வைத்தியசாலைக்கு ஒரே தடவையில் 12 வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல்த் தடவையாகும். இதற்கு முன் ஒரே தடவையில் 8 வைத்தியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இதைப் பல தடவைகள் சுகாதார அமைச்சில் நடைபெற்ற கூட்டங்களிலும் சுட்டிக்காட்டியிருந்த வைத்தியசாலை அத்தியட்சகர் சா.இராஜேந்திரனின் முயற்சி காரணமாகவே இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த வைத்தியர்களின் நியமனத்திற்காக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன,  சுகாதார அமைச்சின் செயலாளர் ரவீந்திர ருபேரு மற்றும் மேலதிக செயலாளர் மகிபால ஹேரத், பணிப்பாளர் நாயகம் அஜித் மெண்டிஸ், பிரதிப் பணிப்பாளர்  சமரக்கோன் கமகே ஆகியோருக்கு வைத்தியசாலை நலன்புரிச்சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .