Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(அப்துல் அஸீஸ்)
கல்முனை கரைவாகு வட்டைப்பகுதியில் சுனாமியினால் பாதிக்கப்பட்டோர்களுக்காக கட்டப்பட்ட மாடிவீட்டுத்தொகுதியில் இதுவரையில் கையளிக்கப்படாத 22 வீடுகளில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று வியாழக்கிழமை குடியேறினர்.
கல்முனையில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோர்களுக்காக 456 வீடுகள் கட்டப்பட்டன. இதில்; 427 வீடுகள் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. எஞ்சிய 29 வீடுகளையும் பெற்றுக்கொள்வதற்காக சுனாமியால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குடும்பங்கள் விண்ணப்பித்திருந்தன.
இந்த நிலையில், இந்த விண்ணப்பங்கள் அம்பாறை மாவட்ட செயலகத்தினால் பரிசீலிக்கப்பட்டு முதற்கட்டமாக 7 வீடுகள் நேற்று வியாழக்கிழமை விநியோகிக்கப்பட்டன. இந்த வீடுகளுக்காக விண்ணப்பித்திருந்த ஏனைய குடும்பங்கள் எந்தவித அனுமதியுமின்றி தாமாமகவே 22 வீடுகளிலும் குடியேறினர்.
குடியேறிய மக்கள் கருத்து தெரிவிக்கையில், 'எங்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்ற அதிகாரிகள் இதுவரை காலமும் இழுத்தடிப்பு செய்து வந்த நிலையில், 7 வீடுகளை மாத்திரமே நேற்றையதினம் விநியோகித்தனர். இந்த நிலையில் ஏனையோர்களுக்கு வீடுகளை விநியோகிக்காமையானது அதிகாரிகள் எங்களை ஏமாற்றுவதாவே உள்ளது' என்றனர்.
.jpg)
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025
gaf Friday, 14 October 2011 07:57 PM
மேயர் பதவியை பெற்று கொடுக்க சண்டை பிடிக்கும் நம்மட எம்பி இவ்வாறான விடயம்களில் கவனம் செலுத்த முடியாத ?
Reply : 0 0
razeek kalmunai Friday, 14 October 2011 08:30 PM
எல்லாம் இனிதாய் இனி நடக்கும் சற்று காத்திருங்கள் ....... கல்முனை மாநகர் ஜொலிக்கும் சற்று காத்திருங்கள்....... எம்பியும் மேயாரும் இணைந்து...... அபிவிருத்தி காண்போம் நாம் எல்லோரும்.......
Reply : 0 0
fathima Saturday, 15 October 2011 04:53 PM
இதுவரை எம்பி நினைத்து இருந்தா இந்த வீடுகளை கொடுத்திருக்கலாம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025