2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

26ஆம் திகதியை அரச, வங்கி, பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்த கோரிக்கை

Super User   / 2012 ஒக்டோபர் 17 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கையில் முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளை அனுஷ்டிக்கவுள்ளதால் முஸ்லிம் அரச ஊழியர்களின் நன்மை கருதி ஏற்கனவே ஹஜ்ஜுப் பெருநாளுக்கான பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள 26ஆம் திகதி வெள்ளிக்கிழமையை அரச, வங்கி மற்றும் பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்;டத்தரணி ஆரிப் சம்சுடீன் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

"இஸ்லாமிய மாதம்  பிறையை அடிப்படையாக கொண்டு கணிக்கப்படுகிறது. துல்ஹிஜ்ஜா மாத்ததுக்கான பிறை பார்க்கும் குழு, அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை, முஸ்லிம் சமய கலாசார  அலுவல்கள் திணைக்களம் மற்றும் ஏனைய அமைப்புக்களின் ஏகோபித்த முடிவின் பிரகாரம் முஸ்லிம்களின் தியாக பெருநாளான ஹஜ் பெருநாளை எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை கொண்டாடுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும்,  இவ்வருட ஹஜ்ஜுப் பெருநாளுக்கான அரசாங்க பொது விடுமுறை தினமாக  எதிர்வரும் 26ஆம் திகதி என முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. சாதாரனமாக சனிக்கிழமை அரச ஊழியர்களுக்கு பொது விடுமுறை தினமென்பதால் ஏற்கனவே ஹஜ் பெருநாளுக்கான அரச, வங்கி விடுமுறை தினமாக  அறிவிக்கப்பட்டுள்ள 26ஆம் திகதியை பொது விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்துமாறு பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் விடுத்துள்ள கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, முஸ்லிம் தனியார் ஊழியர்களுக்கு சனிக்கிழமை அரைநாள் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என முஸ்லிம் தனியார் ஊழியர்கள்  தொழில் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • Jsu Thursday, 18 October 2012 07:27 AM

    சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி

    Reply : 0       0

    Thala. Sunday, 21 October 2012 04:37 PM

    உருப்பட மாடிங்களா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X