2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

பொத்துவில் பிரதேசசபைக்கு 3 மாடிகளையுடைய புதிய கட்டிடம்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 30 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}



(ஏ.ஜே.எம்.ஹனீபா)


அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசசபைக்கு புதிய நிரந்தர நிர்வாகக் கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

பொத்துவில் பிரதேசசபைக்கு நிரந்தரமான கட்டிடமின்றிய பிரச்சினை நீண்டகாலமாக இருந்துவந்தது. இந்நிலையில், பொத்துவில் பிரதேசசபையின் தவிசாளர் எஸ்.எம்.வாசீத்தின் வேண்டுகோளுக்கமைய இக்கட்டிடப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சின்  2 கோடி ரூபா செலவில் 3 மாடிகளைக் கொண்டதாக பொத்துவில் பிரதேசசபைக்கு புதிய நிர்வாகக் கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான நிகழ்வில் பிரதம அதிதியாக உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாவும் கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், அமைச்சரின் பொத்துவில் தொகுதி இணைப்பாளர் ஏ.வதூர்கான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0

  • Nanpan Sunday, 30 September 2012 05:29 AM

    இன்னும் இந்த தோப்பு போடுரத விடுர மாதரி இல்ல...
    இந்த முரை பொத்துவில்ல தோத்துட்டம், இப்படி கட்டிடத்துக்கு அடிக்கல் வாச்சாலாவது நமக்கு ஓட்டு போடுவானுகலா என்டு பாப்பம்.
    அப்போ, பொத்துவில்ல அதாவுல்லாட ஒரு இன்னிசை மலை இருக்கு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X