Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 பெப்ரவரி 18 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எல்.அப்துல் அஸீஸ்)
திருக்கோயில் பிரதேசத்திலுள்ள சாகாமக்குளத்தில் நன்னீர் மீன்பிடித்தொழிலாளர்கள் நன்மைகருதி மூன்று இலட்சம் மீன்குஞ்சுகளை இடும் நிகழ்வு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சாகாமம் நன்னீர் மீன்பிடித்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் ஒத்தாசையுடன் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த வேலைத்திட்டத்தினூடாக திருக்கோயில் பிரதேசத்திலுள்ள நன்னீர் மீன்பிடித்தொழிலாளர்களின் வாழ்வாதார நிலை உயர்வடைய உள்ளது.
இதனடிப்படையில் இன்று ஒரு இலட்சம் மீன்குஞ்சுகள் குளத்தில் இடப்பட்டதுடன் அடுத்து இருவாரத்திற்குள் இன்னும் இரண்டு இலட்சம் மீன்குஞ்சிகள் இடப்பட உள்ளன. இவற்றில் திலாப்பியா, நைலோட்டிக்கா, கொமன்கப், கிறஸ்கப், றோகு போன்ற மீன் இனங்கள் அடங்கி உள்ளன.
இன்றைய இந்நிகழ்வில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் அம்பாறை மாவட்ட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் திமுது வோகாவத்த, அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களுக்கான நீர வளங்கள் விரிவாக்கல் உத்தியோகத்தர் எஸ்.வில்லியம் மொபட் உட்பட நன்னீர் மீன்பிடித்தொழிலாளர்களும் கலந்துகொண்டனர்.
3 minute ago
47 minute ago
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
47 minute ago
3 hours ago
8 hours ago