2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மட்டு, அம்பாறையில் 33 தொழிற்பயிற்சி கற்கைகளுக்கு ஆணைக்குழு அங்கீகாரம்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 16 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


தொழிற்பயிற்சி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பயிற்சி நிலையங்களினால் வழங்கப்படும் மேலும் 11 கற்கைநெறிகளுக்கும், மட்டு. மாவட்ட பயிற்சி நிலையங்களின் 22 கற்கைகளுக்கும் மூன்றாம்நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் தேசிய தொழில்சார் தகைமை (என்.வி.கியு.) அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் மொத்தமாகவுள்ள 16 பயிற்சி நிலையங்களுள் 5 நிலையங்களின் மூலம் வழங்கப்படும் கற்கைநெறிகளுக்கே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், மட்டு. மாவட்டத்தில் 11 நிலையங்களால் வழங்கப்படும் 22 பயிற்சிநெறிகளுக்குமே இந்த அங்கீகாரம் கிடைத்துளளது.

என்.வி.கியு. அங்கீகார சான்றிதழ் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக மூன்றாம்நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் உயர்மட்ட குழுவினர் அண்மையில் இவ்விரு மாவட்டங்களுக்கம் விஜயம் செய்திருந்தது.

சம்பந்தப்பட்ட நிலையங்கள் குறித்த பாடநெறியை நடத்துவதற்காக தம்வசம் கொண்டுள்ள இடவசதி, உபகரண வசதிகள், சுற்றுச்சூழல் ஏற்பாடுகள், மாணவர்கள் மற்றும் போதனாசியர்களின் முன்னேற்ற அறிக்கை போன்ற பல்வேறு விடயங்கள் இக்குழுவினரால் ஆராயப்பட்டன.

அத்துடன் என்.வி.கியு. அங்கீகாரம் பெறுவதற்கு கொண்டிருக்க வேண்டிய அடிப்படை நியமங்கள் தொடர்பிலும்; கவனம் செலுத்தப்பட்டது. இந்நிபந்தனைகள் அனைத்தையும் திருப்திப்படுத்திய பயிற்சிநெறிகளுக்கே அங்கீகார சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி நிந்தவூரிலுள்ள அம்பாறை மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் வழங்கப்படும் தையல் பயிற்சிநெறி (என்.வி.கியு மட்டம் - 4), குளிரூட்டி மற்றும் காற்றுச்சீராக்கி திருத்தல் (மட்டம் - 3) கற்கைநெறிகளுக்கும் மத்திய முகாம் நிலையத்தினால் வழங்கப்படும் மேசன் (என்.வி.கியு மட்டம் - 3), தையல் (மட்டம் - 4), ஒட்டுவேலை (மட்டம் - 3) போன்ற கற்கைகளுக்கும் தமண தொ.ப.நிலையத்தின் தையல் (மட்டம் - 4), வாகன மின்சார தொழில்நுட்பம் (மட்டம் - 3) ஆகிய பயிற்சிகளுக்கும் சம்மாந்துறை நிலையத்தின் வேலைத்தள பகுப்பாய்வு அதிகாரி (மட்டம் - 4), மோட்டர் வைண்டிங் (மட்டம் - 3), குளிரூட்டி மற்றும் காற்றுச்சீராக்கி திருத்தல் (மட்டம்௪) கற்கைகளுக்கும் இறக்காமம் நிலையத்தில் வழங்கப்படும் மர கைவினைஞர் (மட்டம் - 3) கற்கைக்கும் புதிதாக மேற்படி என்.வி.கியு. அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது.

அதேநேரம், மட்டு மாவட்டத்தைப் பொறுத்தவரை வாகரை தொழிற்பயிற்சி நிலையத்தினால் வழங்கப்படுகின்ற தச்சுவேலை, மேசன் பயிற்சிகளுக்கும் ஓட்டமாவடி நிலையத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் கற்கைக்கும் வாழைச்சேனை தொ.ப.நிலையத்தின் த.தொ. தொழில்நுட்பம், நீர்க்குழாய் பொருத்துனர் பயிற்சிநெறிகளுக்கும் வந்தாறுமூலையிலுள்ள தேசிய தொழிற்பயிற்சி வளாகத்தின் மோட்டார் சைக்கிள் திருத்துனர், வெளியிணைப்பு படகு இயந்திர திருத்துனர், வாகன தொழில்நுட்பம் அழகுக் கலை மற்றும் கேச அலங்காரம், தச்சுவேலை போன்ற கற்கைகளுக்கும் காத்தான்குடி பயிற்சி நிலையத்தின் த.தொ. தொழில்நுட்பம் கற்கைக்கும் வவுணதீவு நிலையத்தினால் வழங்கப்படும் மேசன், தச்சுவேலை பாடநெறிகளுக்கும் பட்டிப்பளை நிலையத்தின் மின்னிணைப்பு, நீர்க்குழாய் பொருத்துனர் பயிற்சிகளுக்கும் களுவாஞ்சிக்குடி நிலையத்திலுள்ள நீர்க்குழாய் பொருத்துனர் பயிற்சிக்கும் ஓந்தாச்சிமடம் தொ.ப.நிலையத்தின் மோ.சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி திருத்துனர், அலுமீனியம் பொருத்துனர் பயிற்சிநெறிகளுக்கும் வெல்லாவெளி நிலையத்தின் மர கைவினைஞர் பயிற்சிக்கும் என்.வி.கியு. மட்டம் 3 அங்கீகார சான்றிதழ் கிடைக்கப் பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X