2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

திவிநெகும 4ஆம் கட்ட நிகழ்ச்சித் திட்டம் அம்பாறையில் ஆரம்பம்

Super User   / 2012 ஒக்டோபர் 25 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்,
ஏ.ஜே.எம்.ஹனீபா)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திவிநெகும 4ஆம் கட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் மரங்கள் விநியோக நடவடிக்கை அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றன.

கல்முனை பிரதேச செயலகத்தின் பிரதான நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் கல்முனைக்குடி 2ஆம் பிரிவில் இடம்பெற்றது. இதன்போது மரநடுகை இடம்பெற்றதுடன் பயனாளிகளுக்கு மரக் கன்றுகளும் விநியோகிக்கப்பட்டன.

இதேவேளை, பயிர் விதைகள் மற்றும் மரக் கன்றுகள் நடும் வேலைத்திட்டம்;; இன்று சம்மாந்துறை பிரதேசத்தில் நடைபெற்றது.

சம்புமடுக் கிராமத்தில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்றது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்கான நிகழ்வு அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் ரீ.ஜெயரூபன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதேபோன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரதான நிகழ்வு; ஆலையடிவேம்பு கிராமத்தில்; சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் என்.நேசராஜா தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன்; உட்பட பலர் கலந்துகொண்டார்
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X