Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 மார்ச் 09 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
'திவி நெகும' 10 இலட்சம் வீட்டுத்தோட்ட மனைப்பொருளாதார அலகுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் 50 ஆயிரம் வீட்டுத்தோட்ட மனைப்பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இடம்பெறவுள்ளன.
இந்நிலையில், அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேச செயலக பிரிவுகளில் இந்த வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளும் கள உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவாசாய அபிவிருத்தி உதவியாளர்கள், குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் போன்றோர்களுக்கான வேலைத்திட்ட அறிவூட்டல் செயலமர்வு இன்று இடம்பெற்றது.
இதன் அடிப்படையில் கல்முனை பிரதேச செயலகத்திலும் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் இன்று இந்தச் செயலமர்வு இடம்பெற்றது.
இதில் வளவாளர்களாக கால்நடை வைத்திய அதிகாரிகள், மீன்பிடி திணைக்கள அதிகாரிகள், தென்னை அபிவிருத்திச்சபை அதிகாரிகள், விவசாய போதனா ஆசிரியர்கள் போன்றோர்கள் கலந்துகொண்டனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago