2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

சட்டவிரோதமாக படகுமூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 6 பேர் கைது

Super User   / 2012 செப்டெம்பர் 18 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

பொத்துவில், கோமாரி பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலிய செல்வதற்கு முற்பட்ட 6 பேரை இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்ததாக பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்தகுமார தெரிவித்தார்.

இதன்போது, டொல்பின் ரக வான் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கோமாரி கடற்கரை பிரதேசத்தில் இன்று அதிகாலை அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு முயற்சித்த 6 பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து பொத்துவில் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய இருவரும் அம்பாறை, மத்திய முகாம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

  Comments - 0

  • meenavan Tuesday, 18 September 2012 12:25 PM

    ஆஸ்திரேலிய ஆசை அம்பாந்தோட்டை வாசிகளைகளையும் விட்டுவைக்கவில்லை.........அரசியல் தஞ்சமா......?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X