2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

கழுத்தில் வயர் இறுகியதில் 6 வயது சிறுமி பலி;பாலமுனையில் சம்பவம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 25 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் கழுத்தில் வயர் இறுகியதால் அதே இடத்தில் குறித்த சிறுமி மரணமான சம்பவமொன்று இன்று காலை அம்பாறை மாவட்டத்தின் பாலமுனைப் பிரதேசத்தில் இடம்பெற்றது.

பாலமுனை 3ஆம் பிரிவிலுள்ள நூஹா எனும் ஆறு வயதுடைய சிறுமி இன்று காலை தனது வீட்டில் வயர் துண்டொன்றை மரத்தில் கட்டி விளையாடிக் கொண்டிருந்த போது, வயரினுள் கழுத்து இறுகியதால் இந்த மரணம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிறுமியின் தாய் மத்திய கிழக்கு நாடொன்றில் பணிப் பெண்ணாக வேலை செய்து வருவதாகவும், பாட்டியின் பராமரிப்பில் சிறுமி இருந்ததாகவும் தெரியவருகிறது.

சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தற்போது பாலமுனை, மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0

  • MM.Jarook Saturday, 27 November 2010 04:23 AM

    emethu pirethese seithihelai mihe ilehuvaahe therinthu kollek koodiyethaahe irukkurethu.
    nantri.
    anpuden ungel vaasehen
    Jarook Mohamed

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .