2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

மானிய உரங்களை சட்டவிரோதமாக கடத்தி சென்ற 6பேர் கல்முனை பொலிஸாரால் கைது

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 13 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

கல்முனை பிரதேச விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் வழங்கப்பட்ட உரவகைகளை சட்டவிரோதமான முறையில் கடத்தி வந்த 6 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 3 லொறிகள் மூலம் சுமார் 1,050 உரமூடைகளை கடந்த மூன்று தினங்களுக்குள் இவர்கள் கடத்தி வந்ததாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் 350 ரூபாவுக்கு வழங்கப்பட்ட இவ்வுரவகைகளை சட்டவிரோதமான முறையில் வேறு பைகளில் பொதிசெய்து கல்முனையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு கடத்திச் சென்றபோதே இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில், கடந்த வியாழன், வெள்ளி, சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்களாக பெரியநீலாவணை பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து லொறியுடன் 6 பேரை கைது செய்ததுடன் கடத்திசெல்லப்பட்ட 1,050 உரமூடைகளையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்வத்தில் கைது செய்யப்பட் சந்தேகநபர்களை கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலங்களாக விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் வழங்கப்பட்ட உரங்களை சட்டவிரோதமான முறையில் புத்தளம், குருநாகல் போன்ற மாவட்டங்களுக்கு கடத்திச்செல்லப்பட்டு அதிக விலையில் விற்பனை செய்யும் நடவடிக்கை
அதிகரித்துள்ளதாக பொலிஸ் உயர்அதிகாரி ஒருவர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .