2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

வானில் சிக்குண்டு 6 வயது சிறுமி பலி

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 04 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அம்பாறை, மத்திய முகாம் பகுதியில் நேற்று புதன்கிழமை பாடசாலைக்கு சிறார்களை ஏற்றிச்செல்லும் வானொன்றில் சிக்குண்டு சிறுமியொருவர் பலியாகியுள்ளார்.

மத்திய முகாம் 11ஆம் கொலனியைச் சேர்ந்த  முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் சாமித்தம்பி பீர்த்திகா (வயது 6) என்ற சிறுமியே இவ்வாறு பலியாகியள்ளார்.

பாடசாலை முடிவடைந்து வீடு திரும்பிய இச்சிறுமி வானிலிருந்து இறங்கும்போது, வானின் கதவுடன் அவரது கழுத்துப்பட்டியும் சேர்த்து தவறுதலாக  பூட்டப்பட்டதாகவும்  இதனைக் கவனிக்காத வான் சாரதி வானை செலுத்தியபோது சிறுமி வானின் சில்லில் சிக்குண்டு பலியானதாக மத்தியமுகாம் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வானின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவ்விபத்து தெர்டர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X