2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

'சமயங்களுக்கு இடையேயான புரிந்துணர்வுகளை பாதிக்கும் வகையிலான அசம்பாவிதங்கள் வேதனையளிக்கின்றது'

Super User   / 2012 ஒக்டோபர் 04 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மை காலமாக சமயங்களுக்கு இடையேயான சமாதான புரிந்துணர்வுகளை பாதிக்கும் வகையில் பல அசம்பாவிதங்கள் நடைபெற்று வருவது வேதனை அளிக்கின்றது என சமாதானத்திற்கான சமயங்களின்; இலங்கைப் பேரவையின் அம்பாரை மாவட்டம் கிளை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப் பேரவையின் அம்பாரை மாவட்டம் கிளை வெளியிட்டுள்ள மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"சில தினங்களுக்கு முன்னர் பங்களாதேஷில் பௌத்த சமயஸ்தலங்களும் குடியிருப்புகளும் எரியூட்டப்பட்டுள்ளது. இது பௌத்த இளைஞன் ஒருவர் பேஸ் புக்கில் எரிக்கப்பட்ட புனித குர்ஆனின் படத்தை காட்சிப்படுத்திய பின்னணியிலும் அயல் நாடான மியன்மாரில் முஸலிம்களுக்கு எதிரான பாரிய இனப்படுகொலைகளினது பின்னணியிலும் இறை தூதரை இழிவுபடுத்திய திரைப்படத்திற்கு எதிரான பின்னணியிலும் நடந்துள்ளது.

இந்நிகழ்வுகளை எமது பேரவை வன்மையாக கண்டிக்கின்றது. இந்நிகழ்வுகள் மூலம் சமய உணர்வுகளைத் தூண்டி கலகம் ஏற்படுத்த விரும்பும் தீய சக்திகளின் வலையில் மக்கள் சிக்காது பொறுமை காத்து சமயங்களுக்கு இடையேயான ஒற்றுமைக்கும் தீய சக்திகளின் அழிவிற்கும் இறைவனை  பிரார்த்திப்போமாக" என குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X