2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

அக்கரைப்பற்று, திருக்கோவில்; கல்வி வலயங்களில் 338 மாணவர்கள் சித்தி

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு, ஏ.ஜி.ஏ.கபூர், வி.சுகிர்தகுமார், பைஷல் இஸ்மாயில்

2016ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள்  செவ்வாய்க்கிழமை (04) இரவு வெளியாகியுள்ள நிலையில் அம்பாறை, அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் கல்வி வலயங்களில் 338 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக அவ்வவ் வலயக் கல்லிப் பணிப்பாளர்கள் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்றுக் கல்வி வலயத்தில் 228 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர். இந்நிலையில், அக்கரைப்பற்றுக் கோட்டத்தில் 98 பேரும் அட்டாளைச்சேனைக் கோட்டத்தில் 91 பேரும் பொத்துவில் கோட்டத்தில் 39 பேரும் சித்தி பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று  வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாஸீம் தெரிவித்தார்.

அக்கரைப்பற்றுக் கல்வி வலயத்திலுள்ள அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலயத்தைச் மாணவன் முஹம்மட் ஜாபிர் அத்தீக் அஹமட் 187 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளதாக அவ்வித்தியாலய அதிபர் எம்.எஸ்.அப்துல் நயீம் தெரிவித்தார்.  

இதேவேளை, திருக்கோவில் கல்வி வலயத்தில்  110 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக அவ்வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் தெரிவித்தார்.

பொத்துவில் கோட்டத்தில் 14 மாணவர்களும் திருக்கோவில் கோட்டத்தில் 40 மாணவர்களும் ஆலையடிவேம்புக் கோட்டத்தில்; 56 மாணவர்களும் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், இவ்வலயத்தைச் சேர்ந்த தமிழ்மொழி மூலமான 02 மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் 184 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திலுள்ளனர். திருக்கோவில் கோட்டத்திலுள்ள தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தைச் சேர்ந்த கிருபாகரன் புவிராஜனும் ஆலையடிவேம்புக் கோட்டத்திலுள்ள திருவள்ளுவர் பாடசாலையைச் சேர்ந்த கனகராஜ் விதுர்காவுமே 184 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

இவ்வலயத்தில் 3 மாணவர்கள் 182 புள்ளிகளைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X