2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அட்டாளைச்சேனையில் சுமார் 650 மாற்றுத்திறனாளிகள்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 19 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில்   மாற்றுத்திறனாளிகள்; சுமார் 650 பேர்  உள்ளதாக அட்டாளைச்சேனை டாக்டர் ஜலால்டீன் வித்தியாலய அதிபர் ஏ.எல்.பாயிஸ் தெரிவித்தார்.

மலேஷியாவிலுள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரின் அனுசரனையுடன் சுமார் 02 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கதிரைகளும் தைய்யல் இயந்திரங்களும் வழங்கும் நடவடிக்கை, அட்டாளைச்சேனை டாக்டர் ஜலால்டீன் வித்தியாலயத்தில் இன்று திங்கட்கிழமை  நடைபெற்றது.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'மாற்றுத்திறனாளிகளிடம் பெற்றோர் கூடிய கரிசனை காட்ட வேண்டும். சில பெற்றோர்கள் அவர்களை கைவிடுகின்றார்கள். இதனால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.  

மாற்றுத்திறனாளிகளிடமும் ஏதோவொரு திறமை மறைந்திருக்கின்றது. அத்திறமையை நாம் கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டியது கடமையாகும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X