2025 ஜூலை 07, திங்கட்கிழமை

அடையாள வேலை நிறுத்தமும் கவனயீர்ப்புப் போராட்டமும்

Niroshini   / 2015 நவம்பர் 12 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வளப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி அடையாள வேலை நிறுத்தமும் கவனயீர்ப்புப் போராட்டமும் நாளை வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு வைத்தியசாலை வளாக முன்றலில் நடைபெறவுள்ளதாக சம்மாந்தறை ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.பி.எம்.அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

வைத்திய சாலையில் நீண்ட காலமாக சத்திர சிகிச்சை கூடத்தின் அடிப்படை வசதிகள்,சத்திர சிகிச்சை உபகரணங்கள் இல்லாமை,தாதியர் விடுதி புனர்நிர்மாணம் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்யக் கோரியே இந்த அடையாள வேலை நிறுத்தமும் கவனயீர்ப்புப் போராட்டமும் நடத்த எற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் வைத்தியர்கள்,தாதி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .