Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
சிறுவர்களின் உரிமையைப் பாதுகாப்பது, சமூகத்தின் பாரிய பொறுப்பாகுமென அட்டாளைச்சேனை டொக்டர் ஜலால்டீன் வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம். பாயிஸ் தெரிவித்தார்.
சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி, இன்று சனிக்கிழமை (01) அட்டாளைச்சேனை டொக்டர் ஜலால்டீன் வித்தியாலயத்தில் நடைபெற்ற சிறுவர் தின வைபவத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இலங்கையைப் பொறுத்த வரை சிறுவர்களின் பாதுகாப்பும் அவர்களின் உரிமையும் கேள்விக் குறியாக எம்மத்தியில் காணப்படுகின்றது.
இவை தொடர்பாக நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் குறிப்பாக பெற்றோர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதொன்றாக காணப்படுகின்றது.
சிறுவர்களை வளர்ப்பதிலும் அபிவிருத்தியடையச் செய்வதற்குமான ஆரம்பப் பொறுப்பு பெற்றோரிடம் அல்லது சட்டமுறையான பாதுகாவலரிடம் உள்ளது. சுகாதாரக் கவனிப்பு வசதிகளை அடைந்து கொள்வதற்கான அவனின் அல்லது அவளின் உரிமை சமூகக் காப்புறுதி அடங்களான சமூகப் பதுகாப்பின் நலனைப் பெறும் உரிமை உண்டு.
பொருத்தமான வழிமுறை மற்றும் வழிகாட்டல் வழங்குவதற்குள்ள பெற்றோரின் அல்லது சட்ட பாதுகாவலர்களின் பொறுப்புக்கள், உரிமைகள் மற்றும் கடமைகள் என்பவற்றினைக் குறிக்கும்.
சிறுவர்கள் உரிமைகள் சம்பந்தமாக சட்டங்களும், கொள்கைகளும் பாதுகாப்பு பொறிமுறைகள் என்பன இருக்கின்ற போதும். சிறுவர்கள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றமையும் தொழில்களிற்கு அமர்த்தியிருப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது.
சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் அரசும், பொதுமக்களும் சட்டரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும் கடமைப்பட்டுள்ளனர்.
மனித உரிமைகளே சிறுவர் உரிமைகளின் அடிப்படை என்பதால் அனைத்து சிறுவர்களும் சமத்துவமானவர்கள் என்பதை நாம் மனதிற் கொள்வேண்டுமென்றார்.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago