Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
தேசிய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவையில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமையானது கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது என கல்முனை பிரதேச சபையின் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஏ.அப்துல் கபூர் தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவை நியமனங்கள் தொடர்பில் அவர் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
ஜனாதிபதியினால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்தில் இதுவரை 46 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் 9 மாகாணங்களையும் 25 மாவட்டங்களையும் மையமாக வைத்தே முன்னைய ஜனாதிபதிகள் அமைச்சர் பதவிகளை பங்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசியல அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
அந்தவகையில்,1977ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கே.டபிள்யூ.தேவநாயகம், 1989ஆம் ஆண்டில் அம்பாறை மாவட்டத்திலிருந்து ஏ.ஆர்.மன்சூர், 1994ஆம் ஆண்டில் அம்பாரை மாவட்டத்திலிருந்து மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப், 2000ஆம், 2005ஆம் ஆண்டுகளில் அம்பாறை மாவட்டத்திலிருந்து திருமதி பேரியல் அஷ்ரப், 2010ஆம் ஆண்டில் அம்பாறை மாவட்டத்திலிருந்து ஏ.எல்.எம்.அதாவுல்லா போன்றவர்கள் கிழக்கு மாகாணத்திலிருந்து அமைச்சரவை அமைச்சர்களாக இருந்து வந்த வரலாற்று உண்மைகளை யாராலும் மறுக்க முடியாது.
இந்நிலையில்,2015ஆம் ஆண்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைக்கப்பட்டுள்ள புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மூன்று மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களை சேர்ந்தவர்கள் இணைத்துக் கொள்ளப்படாதது அந்த மாகாண மற்றும் மாவட்டங்களின் அபிவிருத்தி, முன்னேற்றங்கள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளன.
மாகாண மற்றும் மாவட்டங்களின் அபிவிருத்தி மற்றும் அடிப்படை பிரச்சினைகள் பற்றி அந்த மாகாணத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சரவையில் அங்கம் வகித்தால் மாத்திரமே குறித்த மாகாணத்தின் பிரச்சினைகளையும் அபிவிருத்தி திட்டங்களையும் உரிமையுடன் பேச முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 minute ago
10 minute ago
35 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
35 minute ago
52 minute ago