2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

அம்பாறையில் 167,000 ஏக்கரில் பெரும்போகச் செய்கை

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 28 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

2016 -2017ஆம் ஆண்டுக்கான பெரும்போகச் செய்கையானது அம்பாறை மாவட்டத்தில் 167,000 ஏக்கரில் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில், இதற்கான நீர்ப்பாசன வசதியானது சேனநாயக்க சமுத்திரத்திலிருந்து நேரடியாகவும் அச்சமுத்திரத்திலிருந்து சிறிய குளங்கள் மூலமாகவும் செய்து கொடுக்கப்படும் என மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் எல்.எஸ்.சிறிவர்த்தன தெரிவித்தார்.

விவசாய நீர்ப்பாசனத் திட்டம் தொடர்பான குழுக் கூட்டம், அக்கரைப்பற்றுப் பிரதேச செயலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

சேனநாயக சமுத்திரத்திலிருந்து நேரடியாக 76,140 ஏக்கருக்கும் கல்லோயா வலதுகரைக் குளத்திலிருந்து 24,010 ஏக்கருக்கும் பண்ணல்கம, எக்கல ஓயா, அம்பலா ஓயா, பன்னல ஓயா ஆகிய குளங்களிலிருந்து 19,850 ஏக்கருக்கும் நீர்ப்பாசன வசதி கொடுக்கப்படும். இதற்காக சேனநாயக சமுத்திரத்தில் 8,324 அடிக் நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளன.

எஞ்சிய 47,000 ஏக்கரும் மழை நீரை நம்பிச் செய்கை பண்ணப்படும் எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X